உலக அழகி நடிகையின் தந்தை கவலைக்கிடம். நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்
- IndiaGlitz, [Friday,March 10 2017]
முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராய் அவர்களின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணராஜ் ராய் அவர்களை ஐஸ்வர்யாராய் உள்பட குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணராஜ் ராய் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் வந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விசாரித்தார். அதுமட்டுமின்றி மருத்துவமனையில் இரவு முழுவதும் தங்கியிருந்து கிருஷ்ணராஜ் ராய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகளை அவரும் அவரது குடும்பத்தினர்களும் அறிந்து வருகின்றனர்.
அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மருத்துவமனையில் இருப்பதால் அவர்களை காண ரசிகர்கள் கூட்டம் மருத்துவமனை முன்பு அலைமோதி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.